மிக்கி - மௌஸ் -online

Wednesday, January 14, 2009

தேவை......


காற்றில் கதைசொல்லும் நீலத் தாவணி,
தலையாட்டும் வெள்ளைப் பாவாடை !,
நகப்பூச்சு கைக்கு நாள்முழுவதும் வேலை தரும் பின்னல்சடை,
உச்சி வகிடில் சிக்காத ஓரிரு முன்முடிகள் !,
பெண்மையின் கண்மை,
கண்-மையின் கீழ் பேசும் விழிகள் !,
விழி பேசும் மொழி பழகும் நெற்றிப் பொட்டு,
பொட்டுக்கு துணை போன விபூதி !,
பெண்மையின் பெருமை சொல்லும் மல்லிகைப்பூ,
பூவின் இருக்கையான வெள்ளிக் கிழமை ஈரக் கூந்தல் !,
ஈரக்கூந்தல் எட்டித் தொடும் உதடுகள்,
உதடுகளிடை விளையாடும் ஒற்றைவட செயின் !,
செயினூடே நீந்தும் ஜோடி அன்னங்களின் டாலர்,
கூந்தல் முடியுடன் கூடி விளையாடும் தோடுகள் !,
காதணிகளுக்காக சொற்பொழிவாற்றும் கைவளைகள்,
வளையல்கள் வாய்ப்பாட்டுக்கு பக்க வாத்தியமான கொலுசுகள்.....

தலைக் கோதும் வாஞ்சை,
முகம் கவிழும் வெட்கம் !,
இதழ் பூக்கும் புன்னகை,
கண்களில் இழையோடும் பாசம் !,
சத்தமில்லாத சிரிப்பு,
எப்போதோ வரும் வருத்தம் !,
எப்போதும் வராத கோபம்,
என்றாவது வெளிப்படும் ஏமாற்றம் !,
என்றுமே விலகாத பொறுமை!,
எனத் தேவைகளின் பட்டியல் முடிவுறாமல் நீண்டுக் கொண்டே போகிறது.
இறைவா, உனக்கு இரக்கமே இல்லையா, நான் கேட்பதெல்லாம், இவற்றில் இருபது சதம் இருக்கிற ஒரு தமிழச்சியை தானே! அவளை எனக்கு காட்டுவதில் உனக்கு ஒரு சதம்கூட இஷ்டமில்லையா....................

குறிப்பு - இந்த இடுகை முழுவதும் காலத்தால் அழியும், நிலையில்லாத உடல், உருவம் மற்றும் நிறம் போன்ற குணநலன்களைத் தவிர்த்து வந்திருக்கிறேன்,

8 Comments:

  • 200 % உள்ள தேவதை துணை கிடைக்க வேண்டிக்கொள்கிறோம்.

    By Blogger பாலராஜன்கீதா, At 15/1/09 4:31 AM  

  • :) பொறுங்க... மாட்டாமலா போயிடும்!

    By Blogger A N A N T H E N, At 15/1/09 2:39 PM  

  • ஹா ஹா... நன்றி பாலராஜன்கீதா! அவ்வளவு பேராசையெல்லாம் இல்லை. 20% போதும்....

    By Blogger மிக்கி மௌஸ், At 15/1/09 10:18 PM  

  • மாட்டினா, கண்டிப்பா உங்களை தேடி வந்து சொல்றேன். ஆனந்தன்.

    By Blogger மிக்கி மௌஸ், At 15/1/09 10:21 PM  

  • Epadi patta ponnu pidikumnu solliteengalla, kavalaiya vidunga...thedi pidichidaren :)

    By Blogger Amu, At 2/8/09 11:52 PM  

  • Hi mikki...nengal ethirparkarathu ella pengalukum irukura adipadai gunanangal than...silaperku athu marainthu irukum...ungaluku epadipatta pen thunaiviyaga amainthalum...ungal anbal...nengal ethir parkarathai...valkai muluvathum anubavika mudiyum...
    ungal kavithai pola ungal manamum azhagaga irukum ena nambugiren.....en vazhthukkal....

    By Anonymous Indhu, At 29/7/10 11:45 AM  

  • unakkaga than en thadal... unakkagathan en pavi... unnai parkum nodigalukaga sila aerm thadaviyavthu eranthu..... janma janma mai kathurukiran.....

    By Blogger jeevi, At 23/8/12 8:38 PM  

  • hai india...

    By Blogger jeevi, At 23/8/12 9:02 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home