ரயில் பயணங்களில்...
தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ இரயில் பயணத்தில் ஏற்பட்ட கண்டதும் காதல் பற்றிய பதிவுன்னு நெனச்சா அதுக்கு நான பொறுப்பாக முடியாது. என்ன பண்றது நமக்கு அப்படி ஒண்ணும் நடக்க மாட்டேங்குதுன்னு வயித்தெறிச்சல்ல போட்ட பதிவு!. ரயில்ல பயணம்னவுடனேயே நாம் எல்லாரும் பயப்படற ஒரு விசயம், அங்க கொடுக்கற சாப்பாடு, ரசம் மாதிரி ஒரு தால் (சாம்பார் மாதிரி), வரட்டி மாதிரி காய்ந்த மிகவும் மெல்லிய (எப்படித்தான் அவ்ளோ மெல்லிசா அவங்களால மட்டும் ரொட்டி செய்ய முடியுதோ, 28 வருசமா வீட்ல நான் பார்த்ததே இல்லை.) ரெண்டு ரொட்டி, ஒரு காய் பொரியல் (சப்ஜி), மோருக்கும் தயிருக்கும் கலப்புத் திருமணம் செய்தமாதிரி (பயங்கர புளிப்பாக) ஏதோ ஒண்ணு, கவிழ்த்தா ஊத்திக்கற மாதிரி ஒரு ரூபா ஊறுகாய் பொட்டலம் எல்லாம் சேத்து 35 ரூபாய் கொடுத்து வயிரெறிஞ்ச அனுபவம் உங்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.
நான் சொல்ல வந்தது என்னன்னா, ரயில்ல கொடுக்கும் சாப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும்னு ஒரு மெனு போட்டு IRTC (Indian Railways Cattering and Tourism Corporation)-ல கொடுத்து இருக்காங்க. சில சதாப்தி ரயில்களில் கை கழுவும் இடத்தில்(வெளிநாட்டவர்காக?!..) ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்காங்க. அதிலிருந்து,
I. BREAKFAST:
1.BREAD WITH BUTTER
2.CUTLET (Veg)
OR
OMELET (Non Veg)
4.TOMATO KETCHUP
NONVEG BREAKFAST @ Rs 21
VEG BREAKFAST @ Rs.18
COFFEE @ Rs.5.50
TEA WITH TEA BAG @ Rs.4.50
II. LUNCH / DINNER :
1.RICE
2.PARATHA
3.DAAL - HARD IN CONSISTANCY
4.VEG DISH (Veg) / EGG CURRY / CHICKEN CURRY (Non Veg)
5.CURD
6.PICKLE
7.DRINKINGWATER IN SEALED GLASS
VEG LUNCH/DINNER @ Rs.32
NON VEG LUNCH/DINNER @ Rs.37
"HAPPY JOUNEY கூடவே Please do not Pay Extra" னு ப்ரேம்ல போட்டுவச்சிருக்காங்க. இதில் பெரும்பாலான நேரம் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். இதிலே AC கம்பார்ட்மெண்ட்க்கு கொடுக்கும் சாப்பாடு ஒரு மாதிரியாகவும் ஸ்லீப்பர் கோச்சுக்கு கொடுக்கும் சாப்பாடு வேறு மாதிரியாகவும் இருக்கிறது. பீகார், ஜார்கண்ட் போகும் பெரும்பாலான ரயில்களில் சாப்பாடு நன்றாகவே இருக்கிறது (எல்லாம் லாலுவின் மகிமை). பெரும்பாலான தமிழ்நாடுவரும் ரயில்களில் சாப்பாடு மோசம் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடுத்த முறை ரயில் பயணத்தின் போது இவற்றை பார்த்து, முடிந்தால் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home