ஓபாமாவுக்கு 2 அப்பா!, 2 அம்மா!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள பராக் ஒபாமாவுக்கு தற்போது வயது 47. இவர் 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் ஹொனோலூலு என்ற இடத்தில், கென்யா தந்தைக் கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்தார். இவரின் தந்தை சீனியர் பராக் ஒபாமா, ஹவாய் தீவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, இவரின் தாயார் ஆன் டன்ஹாமை திருமணம் செய்து கொண்டார். ஒபாமா பிறந்த பின், தம்பதியர் இருவரும் பிரிந்து விட்டனர்.
சீனியர் ஒபாமா பின், கென்யாவிற்கு திரும்பி விட்டார். அங்கு பிரபலமான பொருளாதார நிபுணராக இருந்தார். 1982ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார். முதல் கணவரை விட்டு பிரிந்த பின், ஒபாமாவின் தாயார் ஆன் டன்ஹாம், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சோயட்டோரோ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின், ஒபாமாவின் குடும்பம் இந்தோனேசியாவிற்குச் சென்று விட்டது. 10 வயது வரை அங்கே தான் வசித்தார். மீண்டும் ஹவாய் தீவுக்குத் திரும்பிய அவர், அங்கு தன் தாத்தா, பாட்டியுடன் வசித்தார். பிரசித்தி பெற்ற புனகவ் அகடமியில் கல்வி பயின்றார்.
கென்யா திரும்பிய இவரின் தந்தை, அங்கு மற்றொரு திருமணம் செய்து கொண்டார். இவரின் மாற்றாந்தாய்க்குப் பிறந்த ஏழு சகோதர, சகோதரிகள் உள்ளனர். அதேபோல், ஒபாமாவின் தாயார் இந்தோனேசியாவைச் சேர்ந்தவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதில், அவருக்குப் பிறந்த மாயா சோயட்டோரோ என்ற சகோதரியும் உள்ளார். கடந்த 1983ம் ஆண்டில் கல்லூரிப் படிப்பை முடித்த ஒபாமா, பைனான்சியல் கன்சல்டன்ட் ஆக பணியாற்றினார். பின், சர்ச் சார்ந்த அமைப்பு ஒன்று ஏழைகளின் மேம்பாட்டிற்காக சிகாகோவில் நடத்தி வந்த, திட்டப்பணி ஒன்றின் அமைப்பாளராக 1985ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து ஹார்வர்டு சட்டப் பள்ளிக்குச் சென்று படித்தார்.
ஹார்வர்டில் சட்டப் படிப்பை முடித்த பின், 1991ம் ஆண்டில் சிகாகோவில் உள்ள சிட்லே ஆஸ்டின் சட்ட நிறுவனம் ஒன்றில், அசோசியேட் ஆக பணியாற்றினர். அங்கு தான் அவர் தன் எதிர்கால மனைவியைச் சந்தித்தார். 1993ம் ஆண்டு, சிகாகோ பல் கலைக்கழகத்தில், அரசியல் சட்டம் தொடர்பான பாடங் களை நடத்தும், விரிவுரையாளராக பணிக்குச் சேர்ந்தார். கடந்த 1996ம் ஆண்டு இல்லினாய்ஸ் மாகாண செனட்டர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட் டார். 2004ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அமெரிக்க செனட்சபைக்கு நடந்த தேர்தலில், இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செனட் சபை உறுப்பினர்களில் நடுநிலையான பரந்த நோக்கம் கொண்ட உறுப்பினர் பராக் ஒபாமா என, 2007ம் ஆண்டில் நேஷனல் ஜார்னல் என்ற பத்திரிகை இவரை தேர்வு செய்தது. அப்படிப்பட்ட பெருமைக்குரிய இவர், தற்போது அதிபராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒபாமாவின் மனைவி பெயர் மிச்சேல் ராபின்சன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தன் குழந்தைப் பருவத்தில் நான்கு ஆண்டுகளை பராக் ஒபாமா, இந்தோனேசியாவில் கழித்ததால், இவர் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அங்குள் ளவர்கள் வரவேற்றுள்ளனர். இவருடன் படித்தவர்கள் உட்பட பலரும் ஜகார்தாவில் கூடி, வாழ்த்து தெரிவித்தனர்.
தன் ஆறாவது வயதில், தாயாருடன் ஜகார்தாவிற்கு வந்த, பராக் ஒபாமா, அங்குள்ள கத்தோலிக்க பள்ளியிலும், பின் மென்டங்கில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியிலும் படித்தார். கார்ட்டூன்கள் வரைவதில் ஆர்வம் கொண்ட ஒபாமா, 1971ம் ஆண்டு மீண் டும் அமெரிக்காவின் ஹவாய் தீவுக்குத் திரும்பி விட்டார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னதாக, இந்தோனேசியாவில் ஒபாமா படித்த பள்ளியின் மாணவர்கள் 100 பேர் கூடி, அவரின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர்.
உபயம்- தினமலர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home