மிக்கி - மௌஸ் -online

Tuesday, April 25, 2006

மன நலம் குன்றியவர்கள்:- ஒரு கண்ணீர்க் கதை.



யார் இவர்கள்?,தன்னையும் மறந்து, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் மறந்து, ஏன் வாழ்கிறோம்? என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதையும் மறந்து, இப்பூவுலக கவலைகள் எதுவும் இல்லாமல் எப்போதும் சிரித்துக் கொண்டு,,,,,,
இவர்கள் செய்த தவறுதான் என்ன? கடவுளுக்கு ஏன் இவர்கள் மேல் இத்தனைக் கோபம்?.......மனித சிருஸ்டியின் போது கடவுள் செய்த தவறினால் வந்து பிறந்தவர்களா? இவர்களின் இந்த நிலைக்கு யாரேனும் விளக்கம் சொல்ல இயலுமா? தெரு நாய்களிடம் கடி பட்டு, வால் சிறுவர்களிடம் கல்லடிபட்டு, இவர்கள் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன?.............
முறை தவறி நடந்தால் உனக்கும் இந்த நிலை தான் என்று எல்லோருக்கும் கடவுள் கொடுக்கும் எச்சரிக்கை மணியோ? சமுதாயத்தில் இவர்கள் எப்படி கையாளப்படுகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த மன நலம் குன்றியவர்கள் தோன்றுவதற்க்கான அறிவியல் காரணங்களை கொஞ்சம் அலசுவோம்.
மன நல நோயாளிகளை இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்.

1.பிறவி மன நோயாளிகள்.
2.இடையில் நோயாளி-ஆனவர்கள் அல்லது ஆக்கப்பட்டவர்கள்.

ஒருவனை பைத்தியமாக ஆக்க முடியுமா? காதல் தோல்வியினால் பைத்தியம் ஆனவர்களை பார்த்ததில்லை எனினும், நிறைய கேள்விபட்டிருக்கின்றோம், சினிமாக்களில் பார்த்திருக்கின்றோம் .இது எந்த அளவு உண்மை?. நானும் ஒரு மருத்துவன் என்பதால் எனக்கு தெரிந்த, படித்தவற்றை கொண்டு இதனை ஆய்வு செய்கிறேன். இயற்க்கையின் உச்சகட்ட படைப்பு மனித மூளை ( நம்மில் பலர் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்பது வேறு விசயம்). இது வரை எவரும் அதற்கு இணையான ஒரு கணிணியையொ வெரு எந்த கருவியையோ கண்டுபிடிக்கவில்லை. நிச்சயமாக கண்டுபிடிக்க முடியாது என்பது அடியேனின் தனிப்பட்ட கருத்து. இது வரை இந்த அற்புத கருவி பற்றி நமக்கு தெரிந்ததது வெரும் 5 % மட்டுமே. சில சமயங்களில் இதன் இயக்கத்தை யாராலும் கணிக்கமுடியாது. சிலர் பின்னால் நடக்கப்போவதைக்கூட கணித்து செயல்படுவர். ஆனால் இத்தகைய அற்புத கருவி செயல்பாட்டில் எதேனும் குளருபடி ஏற்பட்டால், அதை சரி செய்வது என்பது இயலாத காரியம். ஒரு பலமான அடி போதும் உஙள் மூளையை செயலற்றதாக ஆக்க (கஜினி நியாபகம் வருகிறதா?). இது போல வெளிக்காயம், மற்றும் மனக் காயங்கள் சில சமயம் மூளையின் செயல்பாட்டை மாற்றிவிடும். இதன் காரணம் இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.

சரி முதல் வகை மனிதர்கள், பிறவியிலேயே மன நலம் குன்றியவர்களாக பிறந்தவர்கள், குறித்து பார்ப்போம். பல பிறவி நோய்கள், இவ்வகை மன நலக் குறைபாட்டை உண்டாக்குகின்றன. எ.கா: டவுன்'ஸ் சின்ட்ரோம்,ஃரஜெல் X சின்ரோம், அல்ஸேமர்ஸ் நோய், அட்டிங்டன்'ஸ் சின்ட்ரோம், பிலடெல்ஃபியா குரோமொசோம் ... போன்றவை. இவ்வகைக் குழந்தைகள் பல சம்யங்களில் உடல் வளர்ச்சி குன்றி இருப்பர், மிக அரிதாக இவர்களின் ஆயுள்காலம் 5 ஆண்டுகளைத் தாண்டும்.
இவ்வாறு மன நலம் குன்றி பிறக்கும் குழந்தைகளை பழக்குவதற்க்காக தனியாக பள்ளிகளும் குழந்தை காப்பகங்களும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உண்டு. இவர்களை தன் வேலைகளை தானே செய்யவும், சொல்லுவதை ஓரளவுக்கு புரிந்துக் கொள்ளும் வகையிலும் செய்யலாம். ஆனால் பூரண குணம் என்பது நடைமுறையில் சாத்தியமானதல்ல. இந்த நோய்கள் ஏற்படுவதற்க்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சொந்ததில் திருமணம் செய்யாதிருப்பதும், கருவுற்ற காலங்களில் புகை, கதிரியக்க பொருள்கள் மற்றும், மது அகியவற்றை தவிர்ப்பதும், நோய்கள் உண்டாகாமல் தடுக்கும் வழிகளாகும்.
ஆனலும் கடவுளின் அறிய படைப்பில் தவறி வந்து விட்ட இவர்களை அவர்கள் வாழும் நாள் வரை எந்தவகையிலும், மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்தாமல், அன்போடு அரவணைக்க வேண்டியது, ஒவ்வொரு (சரியாய் பிறந்த! ) மனிதனின் கடமை. அது தான் மனிதம், மனிதப் பண்பு ஆகும். இதை உலகிலுள்ள எல்லமவர்க்கும் செய்ய முடியாதென்றாலும், குறைந்ததது, நம் குடும்பத்திலோ அல்லது வீட்டருகில் உள்ளவர்களுக்காவது செய்யலாமே.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home