மிக்கி - மௌஸ் -online

Sunday, April 23, 2006

அல்சீமர்ஸ் நோய் -ஒரு மரபியல் பார்வை


ஒரு மரபியல்(genetics) மாணவனுக்கு இதைவிட ஒரு நல்ல தலைப்பு இருக்க முடியாது. நல்லது!. இது தமிழில் நான் எழுதும் முதல் பதிவு எனவே தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். நான் படித்த பெரும்பாலான தமிழ் பதிவுகள் இலங்கைத் தமிழில் ஆக்கப் பட்டுள்ளதாக அறிந்தேன். எனது பதிவுகள் சற்றே வேறு பட்டு தமிழகத் தமிழில் (தமிழகத்தில் யாரும் இப்போது 'தமிழ்' பேசுவதில்லை என்பது வேறு விசயம்.மேலும் எனக்கு மிகவும் பிடித்த இலங்கைத்தமிழ் எனக்கு வராது என்பதுவும் ஒரு காரணம்.) ஆக்க முயன்றுள்ளேன். எனது பதிவுகளில் அரசியல் அறவே கூடாது என்பது எனது முடிவு. அரசியல் பேச பல நண்பர்கள் ஆர்வுற்றுள்ளனர். மேலும் அரசியல் பேச எனக்கு அனுபவம் போறாது.அறிவியல் பற்றி எழுதலாம் என்பதுவும் எனது எண்ணம்.ஒரு சுஜாதா மாதிரி இல்லை என்றாலும், எனக்கு தெறிந்த அறிவியல் சமாச்சாரங்ளை எழுதுவேன்.

ஆமாம். அல்ஸேமர்ஸ் (Alzhemers என்ன ஒரு அழகான பெயர் !) என்பது ஒரு வித மரபியல் நோய். அதவது தலைமுறை தலைமுறையாக வருவது. நமது முன்னோர்கள் நமக்காக ஆசையுடன் தருவது. நோயின் அறிகுறிகள் மிகப்பல, சமயங்களில் 40 வயதை தாண்டிய பின்னரே அறியவரும். முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் கூட இந்த நோயால் பாதிக்க பட்டவர் தான் (ஐய்யா அமெரிக்கரும் விதிவிலக்கல்ல! ). நோயின் அறிகுறிகள் படித்து விட்டு ஐயோ எனக்கும் அல்ஸேமர்ஸ் என்று நீங்கள் பதறினால் நான் பொறுப்பல்ல. முதலில் தற்கலிக நியாபக மறதி ஏற்படும். இது சில சமயங்களில், உங்களுக்கு மிக பழக்கப்பட்ட அன்றாடம் செய்கின்ற செயல்கள் கூட நினைவிற்க்கு வராது. எடுதுக்காட்டாக உங்கள் வீட்டுக்கு போகும் வழி மறந்து போதல்.இந்த நோய் மற்ற மரபு நோய்கள் போல ஆண்களையே அதிகம் தாக்கும் (ஆதாம் செய்த பாவம் இன்றும் தொடர்கிறது.!!). மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக மறந்துக்கொண்டே வரும். ஒரு கட்டதில் (1- 2 வருடங்களில்) தான் யார் ? தனது விலாசம் என்ன? என்பதும் மறந்து போகும். இந்த நிலையை அடைந்த பலர், 'பைத்தியம்' என்று சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டு ரோடுகளில் நடமாடும் அவலமும் அரங்கேறும்.எனது முன்னோர் யாரும் பைத்தியம் இல்லையே? என்று வினவினால் இருக்க வேண்டிய அவசியம் இல்லை! என்பது தான் விடையாக அமையும்.அது ஜீன்களின் சித்து விளையாட்டு. இதுவரை இந்த நோயிற்க்கு காரணமான ஜீன் கண்டறியப்படவில்லை.

சரி நோய் வந்து விட்டால் என்ன செய்வது?. இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்து பயனற்றதாக மாறி விடும். இதனை சரி செய்ய வென்டுமனால் செத்த செல்களை எடுத்து விட்டு புதிய செல்களை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வைக்க வேண்டும். துரதிஸ்டவசமாக நாம் (மனித இனம்) இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை. எனினும் இப்போதைக்கு உலகின் பல மூலைகளில் நடைபெற்று வரும் 'ஜீன் தெரபி' மூலம் முடிவு காணப்படலாம். அதற்கு நாம் 20 முதல் 25 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் உஙளுக்கும், எனக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அல்ஸெமர்ஸ் வரக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்துக்கொண்டு இருங்கள். விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்!!

2 Comments:

  • இந்த நோயை இந்தியாவில் பார்த்ததில்லை. அமெரிக்காவில்தான் பார்க்கிறேன்.
    மெர்க்குரிக்கும் இந்த நோய்க்கும் உள்ள தொடர்பு பற்றி சரியானதா?
    அன்புடன்
    சாம்

    http://www.mercuryexposure.org/
    index.php?article_id=282

    //The most significant imbalance of metals found in the Alzheimers patients was an elevated mercury level and an elevated level of bromine. Leading Edge Research tells us, "levels of mercury were especially significant in the cerebral cortex, especially in an area called the nucleus basalis of Meynert, a primary center of memory retention. Short term memory loss is initially the most common complaint. Researchers have also found significant levels of mercury in the hippocampus and amygdala, which are also structures that relate to memory." Hippocampus is one area in the brain where new brain cells are produced. Heavy metal toxicity in this area of the brain may cause an earlier termination of neuron production.//

    this is from the
    above url

    By Blogger Sam, At 23/4/06 1:48 PM  

  • திரு சாம் அவர்களுக்கு நன்றி.!

    இந்த நோய் இந்தியாவிலும் உண்டு. ஆனால் பெரும்பாலும் கண்டறியப் படாமல் உள்ளது.சொல்லப் போனால் தெனிந்தியாவில் அத்தை, மாமன் உறவில் கலியாணம் செய்வதால் அதிகமாகவே இருக்கலாம். இது கண்டறியப் படவில்லை என்பது தான் உண்மை.ஆம், நீஙகள் குறிப்பிட்டது போல மெர்குறி, அலுமினியம் போன்ற உலோகங்களை உட்கொள்வதாலும் வரலாம் என கண்டறியப்பட்டுள்ள்து. சாதாரண இனிப்பு பலகாரங்களில் மினுமினுப்புக்காக சேர்க்கப்படும் அலுமினியம் (வெள்ளி போன்ற மேற்பூச்சு) இந்னோயினை தோற்றுவிக்கலாம்.

    By Blogger மிக்கி மௌஸ், At 23/4/06 6:11 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home