ராசிகள் -அறிவியல் பூர்வமான உண்மை என்ன? நம்பலாமா? வேண்டாமா?
அறிவோம் அஸ்ட்ரானமி:
'அஸ்ட்ரா' என்றால் நட்சத்திரம். நட்சத்திரஙள் குறித்து படிப்பது அஸ்ட்ரானமி.சரி. ஒரு கேள்வி,,, ஜோதிடத்தை நம்பலாமா? ராசி என்றால் என்ன? ராசிகள் மேலை நாடுகளிலும் உள்ளனவே? அவர்களும் மூடர்களா? (ஏன் அவர்களும் மனிதர்கள் தானே!!) மன்னிக்கவும் ஒரு கேள்வி என சொல்லிவிட்டு பல கேள்விகள் கேட்டுவிட்டேன். இந்த பதிவு இந்த எல்ல கேள்விகளுக்கும் விடை பகரும் விதத்தில் இருக்கும் என நம்புகிறேன்.
எப்போதாவது மொட்டை மாடியில் நின்று நட்சத்திரங்களை ரசித்ததுண்டா? ஆம் எனில் சில நட்சத்திரங்கள் பெரியதாகவும், சில சிரியதாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.ஏன் என தெரியுமா?. ஏன் எனில் நீஙகள் பார்த்த எல்லம் நட்சத்திரங்கள் அல்ல. அதில் சில கோள்களும் அடக்கம். ஆமாம் கோள்களை வெறும் கண்களால் காணலாம்.(தூரத்தில் உள்ள யூரேனஸ், நெப்டியூன்,புளுட்டொ தவிர)
எப்போதாவது கோளரங்கம் சென்று நட்சத்திரம் குறித்தும், கோள்கள் குறித்தும் அவர்கள் காட்டும் படத்தை (தூங்காமல்) பார்த்திருந்தீர்கள் என்றால் இது ஆச்சர்யத்தை தராது. பரவாயில்லை, இப்போது சமயம் உள்ளதெனில், மாலை 7:00 மணியளவில் (உலகின் எந்த இடத்தில் இருந்தாலும்) வெளியே சென்று, கிழக்கில் 40 டிகிரி மேலே பார்க்கவும். மிக பிரகாசமாய் ஒரு நட்சத்திரம் தெரியும். அது தான் வியாழன் கோள். என்னை நம்புங்கள் சத்தியமாக அது கோள் தான்!! (கடவுளெ! எதற்கெல்லம் சத்தியம் செய்ய வேண்டியிருக்கிறது). நட்சத்திரத்திற்க்கும் கோளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் நட்சத்திரம் மின்னும், கோள் மின்னது. என் எனில் அது சூரியனிடமிருந்து ஒளியை பெற்று பிரதிபலிக்கிறது. ஆனால் நட்சத்திரம் தானாக ஒளியை உண்டாக்குவதாலும், அதன் ஒளி வளி மண்டலதில் நுழையும் போது ஏற்படும் மாற்றஙகளாலும் தான் மின்னுகிறது.
தினமும் மாலை 7:00 மணிக்கும் உஙகள் கடிகாரத்தில் (வேறு வேலை இல்லை என்றால்) அலாரம் வைத்துவிட்டு நான் முன்பு சொன்ன அதே இடத்தில் (குறைந்தது ஒரு வாரம் ) பார்த்தீர்கள் என்றால் கோளின் அசைவை, அதன் சூரியனைச் சுற்றும் பாதையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டதாக(காலரை தூக்கி விட்டுக் கொண்டு) சொல்லிக்கொள்ளலாம். இப்படியே வேறு வேறு சமயஙளில் வேறு வேறு இடங்களில், சனி, செவ்வாய், கோள்களையும் காணலாம். ஆனால் வெள்ளி, மற்றும் புதன் கோள்களை காண நீங்கள் காலை 5:00 மணிக்கு எழவேண்டும். ஏன் என்றால் அவை இரண்டும் நமக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ளன. எனவே தான் அவை பகலில் மட்டும் தான் தெரியும், பகலில் சூரிய வெளிச்சம் உள்ளதால் நம்மால் அவற்றை பார்க்க முடியாது (விடியலில் தெரிவதால் தான் வெள்ளி விடி-வெள்ளி என அழைக்கப்படுகிறது).
நம் முன்னோர் வெட்ட வெளியில் வசித்ததால் இது குறித்து நன்கு தெரிந்து வைத்திருந்தனர். மேலும் அவர்கள் (வேலை வெட்டி எதுவும் இல்லாததால்) சில பல நட்சத்திரஙளை இணைத்து ஒரு கற்ப்பனை உருவங்களை (காளை, ஆடு, பெண், மீன்....) வரைந்தனர்.
கோள்கள் கண்ணுக்கு தெரிவதாலும் அவை ஒரே சீரான வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருவதாலும் நட்சத்திரங்கள் நகர்வதில்லை என்பதாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கோள்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்தன என்பதை கண்டுபிடித்தார்கள். மேலும் அவர்களை பொருத்தவரை சந்திரனும் ஒரு கோள், எனவே தான் சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி வர ஆகும் 30 நாள் கால அளவை மாதம் என்று வைத்தார்கள். பூமி சூரியனை சுற்ற ஆகும் 365 நாட்களை வருடம் என வைத்தனர், வருடத்திற்கு ஒருமுறை நட்சத்திரங்கள் சீராக மாறிவருவதையும் கண்டனர்.
மேலும், இடை இடையே சந்திர சூரிய கிரகணங்கள் வந்ததாலும், இது குறித்து அவர்களால் யுகிக்க முடியாததலும், ராகு, கேது என்பவை பாம்புகள் எனவும் அவை சந்திர , சூரியனை விழுங்குவதாகவும் கொண்டனர்.(யூரெனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவை வெறும் கண்களால் காண இயலாதவை எனவே அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை,பாவம்!)
இப்போது சொல்லுங்கள் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு கோள் எங்குள்ளது என்பதை நீங்கள் கூற முடியாதா?. இதற்கும் மனித வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை, அப்படியென்றால் ஒரே சமயத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் இருவருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு இல்லாது இருப்பது ஏன்? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home