மிக்கி - மௌஸ் -online

Thursday, October 23, 2008

பீகாரி படும் பாடு....

வறுமையும் கல்லாமையும் நிறைந்த ஒரு இந்திய மாநிலம் என சொன்னால் உடனே யாருக்கும் நினைவுக்கு வருவது பீகார் மாநிலம் தான், இந்திய முழுவதும் இந்த மாநிலத்து மக்கள் நிறைந்துள்ளனர். சில காலம் முன் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து(ULFA வால்) துப்பாக்கி முனையில் துரத்தப் பட்டனர். பின் மகாராஸ்ட்ரா மாநிலத்திலிருந்து சில விஷமிகளால்(MNS) வெளியேறப்பட்டனர். இப்போது பிகார்மக்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பீகார் வழிப் போகும் ரயில்களை கொளுத்திக் கொண்டுள்ளனர் இந்த அறியாமையில் வாடும் மக்கள்.
இன்றைக்கும் தமிழகத்தின் பெரும்பாலன இடங்களில் பீகாரிகள் இருக்கிறார்கள், சுடும் வெயிலில் ரோடு போடுபவர்களாக, கோழீத்தீவனக் கிடங்குகளில் கூலிகளாக, கோயம்பத்தூர், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் சம்பளமில்லாத் தொழிலாலர்களாகவும், இருந்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.
தனது தந்தையின் மறைவுக்கு பிறகு, மாமா ஒருவரால் கோயம்பத்தூர் கொண்டு வரப்பட்டு, ஒரு நூற்தொழிர்சாலையொன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்ட போது ராஜ்க்கு வயது ஏழு. தினமும் 13லிருந்து 14 மணிநேர வேலைக்குப் பிறகு அவனுக்கு கொடுக்கப் பட்ட சம்பளம் வெறும் 2000 ரூபாய். இதிலும் முக்கால்வாசியை சூப்பர்வைசர் அபகரித்துக் கொண்ட நிலையில், அவன் சிறு சிறு தவறுகளுக்கும் கூட அடித்துத் துன்புறுத்தப் பட்டுள்ளான். 8 வருட சித்ரவதைக்குப் பிறகு ஒரு நாள், சில துணிகளுடன், டிக்கட் இல்லாமல் ஒரு ரயில் பிடித்து, 'கயா'(பீகார்) போக எத்தனித்து ரான்சி(ஜார்கண்ட்) வந்துசேர்ந்தான். ரான்சி வந்து சேர்ந்தவனுக்கு அதிர்சி காத்திருந்தது, கொண்டு வந்த சில துணிகளும் காணாமல் போய்விட்டிருந்தது. போட்டிருந்த துணியுடன் கயாவுற்கு காலநடையாக பயணத்தைத் தொடர்ந்தான். நடை பாதையில் உறக்கம், கிடைத்ததை உண்டு 5 நாள் பயணத்திற்கு பின் நடுக்காட்டில் அழுதுக் கொண்டிருந்தவனை சில விறகு பொறுக்கும் பெண்கள் கூட்டி வந்து சாப்பாடு போட்டு காப்பாற்றினர், childline-என்ற NGO வின் துணையுடன் கயாவில் அவனது வீட்டைக் கண்டுபிடித்து அம்மாவிற்க்கு தகவல் தெரிவித்தனர், ஆனால் அவன் அம்மாவோ ரான்சி வரை வந்து அவனைக் கூட்டிச் செல்ல வசதியற்று இருந்தாள். பின் ஒருவாறு போலீஸ் துணையுடன் வீட்டைச் சென்றடந்தான்.

2 Comments:

  • naan solla vantha paathiya ippo sollitten... meethi paathiya appuram solren

    By Anonymous Anonymous, At 2/11/08 11:53 PM  

  • naan solla vantha paathiya ippo sollitten... meethi paathiya appuram solren --- ippadikku unga puthu rediff frnd

    By Anonymous Anonymous, At 2/11/08 11:54 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home