மிக்கி - மௌஸ் -online

Friday, December 19, 2008

என் முதல் அனுபவம் !!

அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பாதி வருடம் வேறு பள்ளியில் படித்து விட்டு, மீதியை படிக்க புதிய பள்ளிக்கு வந்திருந்தேன். வழக்கம் போல ஆங்கிலம் எனக்கு சிம்ம சொப்பனம் ஆனது. ஆனால் அங்கே ஆங்கிலம் சொல்லித் தந்த டீச்சரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிக அழகாக சிரிப்பார் என்பதற்காகவும், அதிகம் அடிக்க மாட்டார் என்பதற்காகவும். என்ன செய்வது எனக்கு பிடிக்கும் என்பதற்காகவெல்லாம் மதிப்பெண் போடமாட்டாங்களே!. எனவே அரையாண்டுத் தேர்வில் மாதிரிக்காகவும், முழு ஆண்டுத்தேர்வில், முழு அளவிலும் 'பிட்' அடிப்பது என நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து முடிவு செய்தோம். நினைவில் கொள்க! மூன்றாம் வகுப்பு!!. நான் அது வரை பிட் அடித்ததே இல்லை!. எனவே மற்றவர்களிடம் அறிவுரை கேட்டுக் கொண்டிருந்தேன். வெகு நாள் ஆனதால் அவர்களின் பெயர் மறந்து விட்டது.



முதலாமவன், "சின்ன சின்ன பேப்பரா எடுத்து அதிலே எழுதிக் கொண்டு வந்து விடலாம்"
நான், " ஆனா செக் பண்ணி புடிச்சிட்டாங்கன்னா, என்னடா பண்றது?"
இரண்டாமவன், "ஒரு அடி ஸ்கேல் எடுத்து அதிலே எழுதிட்டு போயிடலாமா?"
நான், "ஆமாண்டா, நல்ல ஐடியா, பென்சில்ல எழுதிட்டு போயிடலாம், செக்பண்ணாங்கண்ணா அழிச்சிடலாம்டா."
முத்லாமவன், "பெரிய ஹால்லதான் டெஸ்ட் நடக்கும், ஸ்கேல பாத்து எழுதறது கஷ்டம்டா"
நான், "சரி, வேற என்னடா செய்யமுடியும்?"
இரண்டாமவன் "என்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்குடா!, ஒரு வெள்ளை பேப்பர்ல சோப்பை வச்சி எழுதலாம்டா, பாத்தா தெரியாதுடா."
அப்போதெல்லாம் பரிட்சைக்கு அட்டை, பேப்பர் எல்லாம் நாம் தான் கொண்டு போக வேண்டும்.
நான், "பின்ன எப்படிடா படிக்கறது?"
இரண், "அப்பறம் கொஞ்சம் எச்சல் தொட்டு தடவி பாத்தா தெரியும்டா"
ம்..... ரொம்ப சினிமா பார்ப்பான் போல!, அந்த காலத்தில் 'லவ் லெட்டர்' எல்லாம் சினிமாவில் இப்படித் தான் எழுதுவாங்க.
முதலா "அப்படியெல்லாம் பாத்தா தெரியாதுடா, நான் ஏற்கனவே பண்ணி பாத்துட்டேன்"
முதலாமவன் தொடர்ந்தான்....."நான் ஒரு ஐடியா சொல்றேன்.... ஒரு மெழுகுவர்த்தி எடுத்துக்கோ, அதை பென்சில் மாதிரி கூரா சீவிக்கோ...."
"உம்...." ரெண்டு பேரும் சேந்து சொன்னோம்
"அட்டையின் பின்னாடி, முன்னாடி ரெண்டு பக்கமும் எழுதிக்கோ.."
"அப்பறம்"
"டெஸ்டுக்கு வரும் போது குங்குமம் வச்சிட்டு வாங்கடா!!"
"எதுக்குடா?"
"சொல்றத கேள்டா.... அந்த குங்குமத்தை எடுத்து அட்டை மேல தூவு, அப்பறம் மெல்ல தடவு மெழுவர்த்தில எழுதனது தெரியும்."
ரெண்டு பேரும், "சூப்பர் ஐடியாடா! ஆனா நெத்தியில இருக்குற குங்குமம் போதுமாடா?"
அவன், "வேணும்னா ஒரு பொட்டலத்துல கட்டி எடுத்துக்கலாம்டா"
"ஓகே" ரெண்டுபேரும் ஒற்றை குரலில் சொன்னோம்.

மூன்றுபேரும் ஆங்கில பாடங்களை பிரித்துக்கொண்டு முக்கியமான் கேள்வி-பதில், அர்த்தம்-எழுதுதல், எதிர்பதம்-எழுதுதல் எல்லாவற்றையும் எழுதிட்டு போனோம். மூன்று பேருக்கும் சேர்த்து குங்குமம கொண்டு போனது நாந்தான்!. பரிட்சையின் போது, மூன்று பேருக்கும் சேர்த்து ரெண்டு மார்க்-குதான் கேள்வி வந்திருந்தது. அதனால என்ன? ரொம்ப அழகா ப்ளான் பண்ணி யார்கிட்டயும் மாட்டாம பிட் அடிச்சு முடிச்சிட்டோம்.
அப்பறம் சொல்ல மற்ந்துட்டேனே, இதுதான் நான் 'பிட்' அடித்த முதல் அனுபவம், நீங்க வேற எதாவது நெனச்சு வந்திருந்தால் இப்போ இன்னொரு முறை பதிவை சரியான கண்ணோட்டத்துடன் படிங்க...

5 Comments:

  • அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......................மூணாங்கிளாசுலயேவா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரொம்பப் பீத்திக்காதீங்க:):):)

    By Blogger rapp, At 19/12/08 3:33 AM  

  • ஆமாம்! நான் என்னமோ நல்லவன் தான், சேர்க்கை சரியில்ல அவ்வ்ளோதான். ஹி ஹி...

    By Blogger மிக்கி மௌஸ், At 19/12/08 10:31 PM  

  • ஆமாம்! நான் என்னமோ நல்லவன் தான், சேர்க்கை சரியில்ல அவ்ளோதான். ஹி ஹி...

    By Blogger மிக்கி மௌஸ், At 19/12/08 10:31 PM  

  • Neenga moonappu padikirapolendhe vallavara??!!! Aanalum neenga romba nallavaru sir...

    By Blogger Amu, At 2/8/09 11:57 PM  

  • social responsibilities iruka vendiyathuthan athukaga
    ippadiya ??????????????????????

    By Anonymous Anonymous, At 11/9/09 5:45 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home