மிக்கி - மௌஸ் -online

Tuesday, December 16, 2008

இரவும் நிலவும்




மாலை ஐந்தரை மணிக்கே வானம் இருட்டியிருந்தது. டிசம்பர் மாதம் அதுவும் இரண்டாவது வாரத்தில் 'இரவு', ஆறு மணிக்கே ஆரம்பமாகும். கடல்மட்டத்திலிருந்து சுமார் பத்தாயிரம் அடி உயரத்தில் இமய மலைச் சரிவில் உள்ள ரம்மியமான ஊர் ஜோஷிமட், தமிழில் ஜோதிர்மடம் என்று சொல்லலாம். பொதுவாக சூரியன் காலை ஏழு மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை தான் தரிசனம் கொடுப்பான். அதிலும் மலைச்சரிவின் இட வல பக்கங்களைப் பொறுத்து சூரியஒளியின் நேரம் மாறுபடும். சூரியன் மறைந்து நிழல் படரத்தொடங்கிய அந்தத் தருனத்தில் குளிர் இருளை முந்திக் கொண்டு ஊரைத் தழுவ ஆரம்பித்திருந்தது. நேரமாக நேரமாக தழுவலின் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது. மக்கள் தீமூட்டி அதன் அருகே அமர்ந்துக் கொண்டும், சிலர் தீ மூட்டி அதை உறிஞ்சிக் கொண்டும் இருந்தனர். சுமார் ஏழு மணிக்கு குளிரும்-இருளும் கைகோர்த்துக் கொண்டன.பாவம் அவர்களின் கூட்டணி வெகுநேரம் நீடிக்க வில்லை. முழுநிலவின் வருகையைக் கண்ட 'இருள்' தனது ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டது. ஒரு கிழக்கு மலையிடுக்கிலிருந்து மெல்ல எழுந்த ஒளிக்கீற்று சிறிது சிறிதாக வளர்ந்து முழுநிலவாக பிரசவமானது. அந்த நிலவொளியின் பின்னனியில் மலையிலிருந்த ஊசியிலை மரங்கள், கறுத்து நிழல் போல் தோன்றின. மேகங்களற்ற வான வீதியில் நட்சத்திர பார்வையாளர்களின் முன், நிலவு தன் ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருந்தது. ஊரில் இருந்தவர்களில் சிலர் நெருப்பின் துணையையும், சிலர் நெருப்பையொத்த துணையையும் தேடி ஏற்கனவே அடைந்திருந்தனர்...

4 Comments:

  • ஆஹா! அசத்தல் நடை :claps:
    உங்கள் வர்ணனை திறன் மெச்சும்படி உள்ளது. தொடர்கதையா? இன்னும் வருமா? அல்லது முடிந்துவிட்டதா (எனக்கு புரியாமலே?)

    By Blogger Shakthiprabha (Prabha Sridhar) , At 17/12/08 12:11 AM  

  • நன்றி சக்தி பிரபா!, வருகைக்கும் வாழ்த்துக்கும். இல்லை, இது கதை அல்ல, சமீபத்தில் நான் பார்த்து மிகவும் ரசித்த ஒரு நிகழ்வு. ஜோஸிமட்டின் இன்னொரு பெயர், புதுமணத் தம்பதியரின் சொர்கம் (honey mooners paradise)

    By Blogger மிக்கி மௌஸ், At 18/12/08 1:02 AM  

  • chanceless hmm

    By Blogger kvsent, At 29/12/08 5:03 PM  

  • Excellent... Nalla rasanaiyalar...
    Post panirukara picture romba azhagu. Joshimath, iyarkaiyai nesikira ellarukum sorgham dhan...

    By Blogger Amu, At 3/8/09 12:01 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home