மிக்கி - மௌஸ் -online

Wednesday, May 31, 2006

தி டாவின்சி கோட் - படமும் பாடமும்..........

'தி டாவின்சி கோட்' நாவல் ('புதினம்' என்பது ஒத்த தமிழ் வார்த்தை எனினும், புத்தகம் என்றே பயன்படுத்துகிறேன்.) வெளியான நாள் முதல் அது குறித்த விமர்சனங்களும்,சூடான வாக்கு வாதங்களும் நடந்து வருகின்றன. இது குறித்து சில நூறு பதிவுகளேனும் தேடக் கிடைக்கும். ஆனால் இப்பதிவின் நோக்கம் கர்த்தர் திருமணமானவரா? மேரி மெக்டலின் கடவுளா இல்லையா என்பது அல்ல (சொல்லும் போதே இதயம் ஒரு துடிப்பு ஸ்கிப் செய்யுதே! டான் பிரவுன் யு ஆர் கிரேட்!) . தி டாவின்சி கோட் புத்தகத்தையும் படத்தையும் விவதிப்பதே ஆகும். ஒரு புத்தகம் படமாக வெளிவரும் போது அதில் மிகப்பல நடைமுறை சிக்கல்கள் இருக்கும். புத்தகத்தில் ஒரு காட்சியை உருவகப்படுத்தும் போது அதற்கு மிகப் பல பக்கங்கள் தேவைப்படும் ஆனால் அந்த காட்சியை திரைப்படம்மாக எடுக்கும் போது, அது ஒரு சில வினாடிகளில் முடிந்து விடும். மேலும் புத்தக உலகம் என்பது மிகவும் பறந்து விரிந்தது,புத்தகம் வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம், புத்தகம் வாசிப்பவர் (வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் வயது, வாழ்க்கை முறை, வாழுமிடம் ஆகியவற்றை பொருத்து கற்பனை செய்து) அனைத்து நிகழ்ச்சிகளையும் மனக்கண் முன்கொண்டுவந்து அந்தக் கதையில் ஆழ்ந்து, படிப்பதனால் அந்த கதை மிகவும் சுவரசியமானதாகவும், அந்த புத்தகம் மிகவும் விரும்பி படிக்கக் கூடியதாகவும் ஆகிறது. மிகச்சில புத்தக ஆசிரியர்களே இவ்வகை புத்தகங்கள் எழுதுவதில் வெற்றியடைகின்றனர். இந்த புத்தகத்தின் ஆசிரியர் டான் பிரவுன் இதில் அமோக வெற்றி பெற்றார் என்றால் அது மிகையாகாது. இதே கருத்தை முன்வைத்து '70களில் எழுதப்பட்ட "The holy grail The holy blood்" என்ற புத்தகமும் இந்த அளவு பரபரப்பை உருவாக்கியது என்றாலும், அது ஒரு நாவல் போல அமையாததால் பரவலான மக்களால் வாசிக்கப்படவில்லை. (தற்ப்போது அந்த ஆசிரியர் டான் பிரவுன் தன்னுடைய கருத்தை திருடிவிட்டர் என IPR் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்) சரி! நாம் நமது விவாததிற்க்கு வருவோம். நான் இந்த புத்தகத்தை முன்பே வாசித்திருக்கிறேன். ஆனால் திரைப்படத்தை குறித்த விமர்சனங்களையும், கருத்துகணிப்புகளையும் வாசித்ததில்லை (அல்லது படத்தை பார்க்கும் வரை படிக்க வேண்டாம் என கருதி வாசிப்பதை தவிர்த்துவிட்டேன் ). எனவெ எனது இந்த பதிவு 'தி டாவின்சி கோட்' பற்றிய என் சொந்த கருத்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
புத்தகத்தை படமாக மாற்றும் முயற்சியில் படத்தின் இயக்குனர் ஓரளவு வெற்றியடைந்துள்ளார். ஏன் ஓரளவே வெற்றி அடைந்துள்ளார் எனில், புத்தகத்தை வாசிக்காமல் படத்தை பார்ப்பவர்களுக்கு பல சந்தற்ப்பங்களில் ஏமாற்றமும், குழப்பமும் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.குறிப்பாக அந்த அல்பினொ (வெள்ளை வில்லனின்) கடந்த காலம் பற்றி கூறும்போதும், படத்தின் நாயகனும் நாயகியும், தொலைந்த உருண்டையை தேடியலையும் போதும், இன்னும் தெளிவாக சொல்லி இருக்கலாம். அல்பினோ பாத்திரம், இன்னும் அழுத்தமானதாக காட்டி இருக்க வேண்டும். ஒபல் டை -யின் தன்னை தானே வருத்திக் கொள்ளும் வினோத பழக்கத்தை குறித்தும், அதற்க்கு அவர்கள் பயன்படுத்தும் பெல்ட்கள் குறித்த தகவல்களும் மிஸ்ஸிங்.படத்தின் நாயகி இயேசுவின் வாரிசு என்பதற்க்காகவாவது கொஞ்சம் அழகாக இருந்திருக்கலாம்.
இருட்டில் ஒளிரும் எழுத்துக்கள் நிஜமாகவே கற்பனைக்கு அப்பாற்பட்டவை. சோஃபியாவின் கார் மனதில் நிற்கிறது.மற்றபடி, கான்ஸ்டன்டின்னின் கொடுமைகளை காட்சி படுத்தியது அருமை. கிப்டிக்ஸ் வேலை செய்யும் விதத்தை கிராஃபிக்ஸ்-ல் காட்டியுள்ளது அற்புதம். ஒரு நாவலை படமாக மாற்றும் போது உள்ள சிரமங்கள் கண்டு படிக்க வேண்டியவை. அதுவும் முழு கதையும் ஒரே இரவில் நடப்பதாக எழுதப்பட்ட ஒன்றை 2 மணி நேரபடமாக மற்றுவதில் இயக்குனர் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். இன்னும் சிறிது சுவரஸ்யமாக ஆக்க முயற்சி செய்திருக்கலாம். பெரும்பாலான நேரம் பாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர். கண்ணைவிடவும் காதுக்கே வேலை அதிகம்!. நம்ம மணிரத்தினத்திடம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்பார் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நீங்கள் புத்தகத்தை முன்பே படித்திருந்தால் தாராலமாக போய் படத்தை பார்க்கலாம், இல்லை என்றால் ஒரு புத்தகத்தை வாங்கி (மெனக்கெட்டு) அதை படித்து விட்டு பின் போய் பாருங்கள்!. குறைந்த பட்சம், புத்தகத்தை வாசித்தவர் யாராவது இருந்தால் இரு அரை மணி நேரம் கதை கேட்டு விட்டு போய் பார்க்கலாம். இல்லை என்றால் டிக்கெட் வாங்கிய காசு 'விரலுக்கு இரைத்த நீர் தான்' (உனக்கு இது தேவையா "வீண்" ணு சொல்லிட்டு போறத விட்டுட்டு. :-))

Saturday, May 27, 2006

சென்னையிலிருந்து ஒரு நண்பன் ---


நான் எப்போது சென்னை வந்தாலும் என் அத்தை வீட்டில் தங்குவது வழக்கம். அங்கே என் வயதொத்த அத்தை பையன்(ர்) இருப்பான். என்னை விட ஒரு வயதே பெரியவனென்றாலும் அவன் எப்போதுமே எனக்கு ஒரு ஆச்சரியம் தான். எதை பற்றி கேட்டலும் அதைப் பற்றி அரை மணி நேரம் பேசுவான். அவனுக்கு தெரியாத விசயமே கிடையாதா என எனக்கு எண்ணத் தோன்றும்.அவன் தான் எனக்கு கார்களின் பெயர்களை சொல்லித் தந்தான், மொபைல் போன் பின்னால் வரும் ஒளி எவ்வாறு வருகிறது என சொன்னான், சென்னை பெண்களுக்கு யார் யார் பிடிக்கும். ஒரு பெண்ணை கவர என்னென்ன வழிகள் என எல்லாவற்றையும் சொல்லுவான். எல்லாரும் துங்கிய பின்னிரவில் நாங்கள் மட்டும் இது போன்ற கதைகளை கதைத்துக் கொண்டிருப்போம்.அவன் குடியரசு தின விழா அணிவகுப்புக்கு போனது குறித்து மிக பெருமையுடன் சொல்லிக் கொள்வான். இது போன்ற நகரங்களில் படிக்கும் பையன்களுக்கு எல்லா விசயமும் அத்துப்படியாக இருக்கும்.ஒரு மாவட்ட தலை நகரம் கூட இல்லாத ஊரிலிருந்து வந்த என்க்கு இவை எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
ஒரு நாள் என்னை அவன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தான். அது ஒரு பார்-ஆக இருந்தது.அவன் குடிப்பான் என்பது அப்போதுதான் எனக்கு தெரியும். இதெல்லாம் தப்பில்லையாடா? எனக் கேட்டால் அதற்கும் அரை மணி நேரம் எதையாவது சொல்லி சமாளிப்பான். "சந்தர்ப்பத்தால் வருவது பழக்கம், சந்தர்ப்பங்கள் தவிர்ப்பது ஒழுக்கம்" என வைரமுத்து வரிகளை படித்தது சட்டென்று நினைவுக்கு வரவே நான் எழுந்து வெளியெ வந்து விட்டேன். பின்னர் வீட்டுக்கு சென்றவுடன், 'இரவுக்காட்சி படத்திற்க்கு போனோம்' என ஒரு பொய் கூறி விட்டு, அவனை காப்பற்றுவது என் வேலையாக இருந்தது. இது போல ஒருமுறை அவன் வீட்டுக்கு போனபோது மெரினா கடற்கரைக்கு கூட்டிப் போனான். சுனாமியை பத்திரிக்கையில் மட்டுமே படித்த எனக்கு, அதை பற்றி அவன் சொல்ல சொல்ல மிகவும் ஆசசரியமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது. திடீரென்று எழுந்து போனவன், வாயில் சிகெரெட்டோடு வந்தான். அவன் குடிப்பதை பார்த்த எனக்கு இது ஒன்றும் பெரிய தவறாக தோன்றவில்லை, எனவே நானும் அதை பற்றி ஒன்றும் கேட்கவில்லை, பின் அவனாகவே இதில் 'மெந்தால்' உள்ளது, இதை பிடித்தால் வாசமே வராது என்க்கூறி என்னையும் பிடிக்கசொன்னான். அந்த சிகரெட்டை வாங்கி பற்ற வைக்க நினைத்தவன், எதோ ஒன்று தடுக்கவே கடைசி நேரத்தில் வேண்டாம் என சொல்லிவிட்டேன். பின்னர் எப்போதாவது போன் செய்து அரைமணி நேரம் பேசுவான். அவன் செய்கை ஒவ்வொன்றும் எனக்கு வியப்புட்டுவதாகவே இருக்கும். எஸ்.டி.டி எனத் தெரிந்தும் எப்படி இவனால் மட்டும் இத்தனை கதைக்க முடிகிறது என எண்ணிக்கொண்டெ அவன் சொல்ல்வத்ற்கு 'ஆமம்- சாமி' போடுவென். ஒரு முறை அவன் அக்கா கல்யாணத்தில் வைத்து ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான். அவள் பார்க்க மிக அழகாகவும், நல்ல உயரமாகவும், பழுப்பு நிற கண்களுடனும் இருந்தாள்.அவள் அணிந்திருந்த முழுவெள்ளை நிற உடை அவளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. அவள் தன்னுடன் வேலை பார்ப்பதாகவும், தன் நண்பி எனவும் சொன்னான். அன்று இரவு என்னை அவள் வீட்டில் கொண்டு விட்டு வரும்படியும் சொன்னான். எனது அப்பா-அம்மா கலியாணத்திற்கு வந்திருந்ததால் நான் போகவில்லை. அவள் போன பின் அவன் மொபைலிலிருந்து அவளுக்கு போன் செய்து என்னை பேசும்படி சொன்னான், அவள் மிக அழகான ஆங்கிலத்தில் பேசினாள். இவனை போன்றே எல்லா விசயம் குறித்தும் தெரிந்தவளாக அவள் இருந்தாள்.
பின் ஒரு நண்பனின் கலியாணத்தில் வைத்து அவன் காதலியை அறிமுகம் செய்து வைத்தான். இது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, மற்றவள் குறித்து கேட்டவுடன், ஒன்றும் கூறாமல் கண்ணடித்துவிட்டு, இது குறித்து அவன் காதலியிடம் எதுவும் கூறவேண்டாம் என சொல்லிவிட்டான். இவள் ச்ற்றே குட்டையாகவும், நிறைய பேசுபவளாகவும் இருந்தாள். வ்ழக்கம் போல நான் 'ஆமாம் சாமி' போட, அவள் அவளது குடும்பத்தை பற்றியும், இந்த காதல் அவர்களுக்குத் தெரிய வந்தால் வரும் பிரச்சனைகள் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தாள். பின்னாளில் இவனும் வீட்டில் காதலைச் சொல்லி கலியாணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தான். ஆனால் கலியாணச் செலவு முழுவதும் இவனுடையதாகவே இருந்தது. கலியாண நாளின் போது மற்றவள் வந்து எதோ தகராறு செய்யவே, மிகுந்த குழப்பத்திற்கிடையெ கல்யாணம் நடைபெற்றது.
இப்போது அவன் ஒரு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டன். இப்பொதும் அவன் வீட்டுக்கு போனலும் மிகப்பல கதைகள் பேசுவான், இப்பொதெல்லாம் அவை எனக்கு ஆச்சரியத்தை தருவதில்லை. அது இந்த நகரத்து மக்கள் இப்படித்தான் என்று தெரிந்ததாலோ, என் கிராமமே மேல் என எனக்கு தோன்றியதாலும் இருக்கலாம்.