மிக்கி - மௌஸ் -online

Wednesday, March 11, 2009

MY FAVOURITE BHARATHIAR KAVITHAIGAL-3 ஒரு சில உங்கள் பார்வைக்கு


விடுதலை - சிட்டுக் குருவி

ஆத்ம ஜெயம்

ஐய பேரிகை


பாரதியார் கவிதைகள் குறித்த முந்தைய பதிவுகள் -

பாரதியார் கவிதைகள் பாகம்-2

பாரதியார் கவிதைகள் பாகம்-1

....................................................இன்னமும் வரும்.

Tuesday, March 10, 2009

மனித உறவுகள் மேம்பட...


காலை முதல் மாலை வரை வேலை, வேலை, மாத இலக்கு நோக்கி பயணம் என இயந்திரமாகிப் போன இக்கால மக்களிடையே நீரு பூத்த நெருப்பாகிப் போன மங்கிப் போன மனித உறவுகளே இன்றைய தலையாய பிரச்சனை, மாற்றம் காணப்பட வேண்டிய, தீர்வு தேடப்பட வேண்டியஒன்று. கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்ட, பணப்பையிலே புகைப்படமாக பதிந்து போய்விட்ட மனித உறவுகளை பற்றியதே இந்த கட்டுரை. முன்பொரு காலத்தில் சிறந்த மாணவ கட்டுரையாளருக்கு கணிப்பொறி பரிசாக கொடுத்த விகடனுக்காக அடியேன் கிறுக்கியது இது. பத்து வருடங்கள் பறந்தோடிவிட்டன. பழைய புத்தகத்தை புரட்டும் போது இடையே சிக்கியிருந்தது ஒரு காகிதம் அதில் இருந்ததை இங்கே உருவேற்றுகிறேன்.
அன்பு, காற்றைப் போன்றது, நாம் காண இயலாது ஆனால் உணர இயலும். பாசமான பார்வையிலும், அன்பான பேச்சிலும், ஸ்பரிசத்திலும், பாசத் தொடுதலிலும் ஏன் சில சமயம் மௌனத்திலும் அன்பை நாம் உணரலாம். பெருகி வரும் முதியோர் இல்லங்களையும், ஜான் டேவிட்டும், கமல் ஷா வும் உருவான காரணத்தையும் அலச இக்கட்டுரை மூலம் தலைப்பட்டுள்ளேன். "I will be going to special place when i die, but i want to make sure my life special while I'm alive" என்றான் ஒரு ஆங்கில கவிஞன். இது போன்ற மனப்பான்மை உள்ளோரை இக்காலத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். மண்ணோடு மண்ணாக மக்கிப் போன மனித உறவுகளை புதுப்பிக்க என் எண்ணச் சோலையில் பூத்த சில வண்ண மலர்கள் இதோ உங்கள் பார்வைக்காக...
வந்தாரை வாழவைக்கும் தமிழத்தில்தான் தன் பெற்றோரையும், உற்றோரையுமே வாழவைக்க மனமின்றி முதியோர் இல்லங்களில் விட்டுவிடும் மனிதர்கள் இங்கே உலவுகின்றனர். மனிதம் குன்றிப் போன நிலையில் மனிதரிடையே மனிதரைத் தேடும் காலம் இந்தக் கலிகாலம். மனம் உடையவன் தானே மனிதன்!. தான் என்ற அகம்பாவம் கொண்டவனை எப்படி மனிதன் என்பது?. இன்று மனிதனிடையே போட்டி, பொறாமை, சகமனிதனை இழிவுபடுத்தும் தன்மை ஆகியவை விஞ்சி, ஆறறிவு படைத்த மனிதனை, ஐந்தறிவு- துணையை தேட வைத்துள்ளன. ஐந்தறிவு ஜீவன்கள் காட்டும் சுயநலமற்ற உணர்ச்சிகளும், அன்பான பார்வையும் எந்தவொரு மனிதனிடமிருந்தும் பெறப்படுவதில்லை. கால வெள்ளத்தில் பயணிக்க எந்தவொரு மனிதனுக்கும், எந்தவொரு சூழ்நிலையிலும், இன்னொரு மனிதனின் துணை அவசியம். அவ்வாறான துணையை பெற, பிறரையும் தன்னைப் போல் பாவிக்கும் பண்பு அவசியம் வளரவேண்டும். இன்று கல்லூரிகளிலும், பிற பெரும் அலுவலகங்களிலும் சொல்லித்தரப்படும், சுயமேம்பாடு, சுயமேலான்மை போன்றவை ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் முடிவில் போதிப்பது என்னவோ மனித உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்பது தான்!. இவையனைத்தும் தக்க பலன் தந்ததா? என்றால் ஒரு பெரிய கேள்விக்குறி நம் மனக்கண் முன்னே தோன்றி மறைகிறது. "தனிமனித மாற்றமே மனித உறவுகளை பலப்படுத்தும்" என்பதும் ஆராய்ச்சியில் கண்டறிந்த ஒன்றாகும். "family is the first group to be trained in a human race" என்பது விரிவாக்கவியலின் பால பாடம்.1953 தொடங்கி எத்தனையோ திட்டங்கள் மூலம் எத்தனையோ கோடிகள் சமுதாய மேம்பாட்டுக்காக (community development) செலவழிக்கப் பட்டுள்ளன, இதில் ஒரு சிறுபகுதியை குடும்ப மேம்பாட்டிற்காக செலவு செய்திருந்தால் சமுதாயம் மேம்பாடு அடைந்திருக்கும்.
காசநோய் சிகிச்சையில் DOT - direct observation therapy என்று ஒரு முறைஉண்டு. அதாவது மருத்துவ அலுவலர் நோயாளி வீட்டுக்கே போய் அவருக்கு மருந்து கொடுத்துவிட்டு அதை அவர் உண்ணும்வரை உடன் இருந்துவிட்டு வரவேண்டும். இவ்வகை சிகிச்சை நோயாளிக்கு மனதளவில் ஆறுதல் தருவதுடன் மனிதர்களிடையேயான உறவை .......
(இம்முறை கால்நூற்றாண்டுக்கு முன்னரே நடைமுறைக்கு வந்தாலும், இன்று இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு விவேக் ஓபராயின் தூண்டுதல் தேவையாய் இருக்கிறது.)
பி.கு:- மன்னிக்கவும் கட்டுரையில் இவ்வளவுதான் திரும்பக் கிடைத்தது. இதனுடனான இன்றைய கருத்துகளை திணிக்க விரும்பவில்லை. என்ன யோசித்தாலும் அன்று எழுதியது எதுவுமே நினைவில் வரவில்லை என்பதும் உண்மையான காரணமே!