உயிர் குடிக்கும் கிருமியானாலும் வீட்டுக்குள் உள்ள உறவுகளை உயிர்பிக்க வாய்ப்பு கொண்டுவந்தது இந்த கொரோனா.
Work from home வாங்கினால் தான் தெரிகிறது வீட்டு பெண்களுக்கு எவ்வளவு வேலை, பணிச்சுமை, தினசரி டார்கெட் எத்தனை என!
பல வருடங்களுக்கு முன் நான் படித்த பள்ளி பாடத்தை என் மகளின் பாடபுத்தகத்த்தில் மீண்டும் ஒருமுறை படிக்க வைத்தது இந்த கொரோனா.
என்னுள் கல்லூரிக்கு பின் துங்கிவிட்டிருந்த கவிஞனையும், எழுத்தாளனையும் எழுப்பிவிட்டது இந்த கொரோனா.
எனக்கு பிடித்த பாரதியையும், பாரதிதாசனையும் மீண்டும் படிக்க வைத்தது இந்த கொரோனா.
பத்தே நாட்களில் பல பங்கு சந்தை முதலாளிகளை பரம ஏழையாக்கிவிட்டது இந்த கொரோனா.
வெளிநாட்டவர்களையும் வெளிநாடு வாழ்பவர்களையும் வாய் பிளந்து “ஆ” வென பார்த்தவர்களை எல்லாம் “ஐயோ” வென அலற வைத்தது இந்த கொரோனா.
பல நாட்களுக்கு பிறகு கொள்ளையில் முளைத்து விட்டிருந்த புதிய மரத்தையும், அதில் அமர்ந்திருந்த பெயர் தெரியாத பறவையையும் மகளோடு சேர்ந்து பார்க்க வைத்தது இந்த கொரோனா.
வாழ்க்கையின் நிலையாமையை, உறவுகளின் மேன்மையை, வளர்ப்பு பிராணிகளின் பாசத்தை, குழந்தைகளின் மனவோட்டத்தை, மனைவியின் அன்பை புரிந்தது கொள்ள வழி காட்டியது இந்த கொரோனா.
அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் முக்கியத்துவத்தை, மருத்துவர்களின் மேன்மையை, ஊடக பிரபலங்களின் உண்மையான மதிப்பை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டியது இந்த கொரோனா.
எத்தனையோ கொள்ளை நோய்களையும், கொடும் போர்களையும் எதிர்கொண்ட இந்த மனித இனம் கொரோனா வையும் வென்று மீளும். அவ்வாறு மீண்டு வந்தால் தானே நாம் மனிதர்கள்.